Showing posts with label சுகராகம். Show all posts
Showing posts with label சுகராகம். Show all posts

Friday, February 27, 2009

முன்தினம் பார்த்தேனே...

ஹாய் மாலினி... ஐயம் கிருஷ்ணன்...
நான்
இதை சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகு, இங்க எவனும் இந்த அழக ஒரு...
இவ்வளவு அழகாக பார்த்திருக்க மாட்டாங்க
and
ஐயம் இன் லவ் வித் யு.

முன்தினம் பார்த்தேனே, பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ; நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன

துலா தட்டில் உன்னை வைத்து
நிகர்
செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே...
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல்
காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே...
ஒஹ், நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடைசொல்லடி

முன்தினம் பார்த்தேனே, பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக உள்ளமும் புண்ணானதே
இத்தனை நாளாக
மை லவ்...
உன்னை நான் பாராமல் எங்கு நான் போனேனோ;
எஸ் மை லவ்...
நாட்களும் வீணானதே


கடல் நீலம் மங்கும் நேரம் அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்;
விரல்
கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெண்டும் உராயக் கண்டேன் நெருங்காமலே
உன்னை இன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே...

வெண்ணிலா... வெண்ணிலா... வெண்ணிலா...

English Version:

Hi Malini, I am Krishnan....
I must tell you...
you are so beautiful...
No one could have seen such a beauty
in a beauty and I am in love with you...


I saw you yesterday
I lost myself when I sighted you
my heart became like sieve
Where did I go without seeing you
Days were wasted due to that
You are the moon in the sky
I drain myself longing for you
Why don’t you come with me right away
Can we roam in the town together

if we weigh you on one side and gold on other side
weighing scale would lose out, my beauty
You look at my face and talk, you gave first love
how will I go without hugging you, my sweet heart
I will follow like your shadow
I will move around you like a cloud
hundreds of questions hundreds of dreams answer me

Ocean's blue is fading in twilight
Waves come and kiss our body
Heart will immerse in light wet mood
You gave your shoulder to bury my head
You held my hands and came nearby
Why you are not ready for lip lock?
I was day dreaming without sleeping
my life was freezing when I didn’t come near you
where is future for me without you?

(திரைப்படம்: வாரணம் ஆயிரம்)

Monday, January 19, 2009

Ilangathu Veesuthey (இளங்காத்து வீசுதே)

இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வழிஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே

கரும் பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழை சாரல் தெளிக்குதே
புள்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

பின்னி பின்னி சின்ன இலையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ண துணி போல
ஒன்னுக்கொன்னுதான் இணைஞ்சி இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு
அள்ளி அள்ளி தந்து உறவாடும்
அன்னைமடி இந்த நிலம் போல
சிலருக்குத்தான் மனசு இருக்கு
உலகம் அதிலே நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு, யாரும் துணை இல்லை
யாரோ வழி துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல...


மனசுல என்ன ஆகாயம்
தினந்தினம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா? அதிசயத்தை யாரு புரிஞ்சா?
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினந்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு?
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே, தாயின் மடிய தேடி ஓடும்
மழலைய போல.......

Monday, October 20, 2008

Enakku Piditha Paadal...

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயை கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா..

பித்து பிடித்ததை போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதை போல
விழி மனசை குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்...

வெள்ளி கம்பிகளை போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர் துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்...

(திரைப்படம்: ஜுலி கணபதி)
(பாடகர்: திரு. K.J. ஜேசுதாஸ்)


Chellamai Chellam...

என் செல்லம்; என் சினுக்கு
என் அம்முக்குட்டி; என் பொம்முக்குட்டி
என் புஜ்ஜுக்குட்டி; என் பூனைக்குட்டி

செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே

உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக்கொள்வோம்

டெல் மீ நவ், டெல் மீ நவ்
டெல் மீ டெல் மீ டெல் மீ நவ்

சந்திரத்தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னை தூங்கவைப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்
நட்சத்திரங்கள் எல்லாமே அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
நீ என்பதும் அடி நான் என்பதும்
இன்று நாம் ஆகி போகின்ற நேரம்...

காலை சூரியன் குடைப்பிடிக்க
கோலங்கள் எல்லாம் வடம் பிடிக்க
கிளியே உன்னை கைப்பிடிப்பேன்
நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அனைத்திடுவேன்
வானாகினாய் காற்றின் வெளியாகினாய்
எந்தன் ஊணாகி உயிரானாய் பெண்ணே...

(திரைப்படம்: ஆல்பம்)

Saturday, October 11, 2008

Kanmoodi Thirakkum...

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்ததுபோல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாலே...
குடையில்லா நேரம் பார்த்து
கொட்டித் தீர்க்கும் மழையைப்போல
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாலே...
தெருமுனையை தாண்டும் வரையில்
வெறுநாள் தான் என்றிருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்.
அழகான விபத்தில் இன்று ஐயோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்

உன் பேரும் தெரியாதே, உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா
நீயென்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
உயிருக்குள் இன்னோருயிரை
சுமைக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மலையின் சுமையை
உணர்கின்றேன் காதல் இதுவா

ஓஹோ... ஓஹோ...

வீதி உலா நீ வந்தால்
தெரு விளக்கும் கண்ணடிக்கும்
வீடுசெல்ல சூரியனும் அடம்பிடிக்குமே
நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்கத்தானே
மழை குதிக்குமே
பூகம்பம் வந்தால் கூட (ஓஹோ)
பதறாத நெஞ்சம் எனது (ஓஹோ)
பூ ஒன்று மோதியதாலே (ஓஹோ)
பட்டென்று சரிந்தது இன்று (ஓஹோ)

(திரைப்படம்: சச்சின்)

Friday, October 3, 2008

Idhayam Pogudhe...

Idhayam pOgudhE..........
Idhayam pOgudhE enayE pirindhE
Kaadhal iLangaaththu paadugindra paattu
Kaadhal iLangaaththu paadugindra paatu ketkkadhO
Idhayam pogudhE

MaNiyOsai kEtttu magizhvOdu nEtru
KaigaL thattiya kaaLai sendradhengE
Arunbaana en kaadhal malaraagumO
Malaraagi vaazhvil maNam veesumO
Idhayam pOgudhE enayE pirindhE

lalal lalla lalalla lalalla lalalal lalaaa
lalla lalla llalla lalla laalalal lalalaa

Suduneeril vizhundhu thudikkindra meenpOl
ThOgai nenjinil sOgam pongudhammA
Kuyil koova vasandhangaL uruvaagumO
Veyil theeNdum poovil pani neendhumO
Idhayam pOgudhE enayE pirindhE

thanaa nanaa naan nanan ne nannana
thanana naanee naaa thandhanna durrrraaa

MazhaichchaaralOram mayilaadum nEram
Kaadhal sollavum dhEvan illayammA
NizhalpOla unnOdu naan sangamam
TharavENdum vazhvil nee kungumam

(Movie: Pudhiya Vaarpugal)

Deiveega Raagam

mmmhhhmmm...oho...

Deiveega raagam thevittadha paadal
Kettalum podum ila nenjangal vaadum
mmmhhhmmm...oho...

Senthazham poovaikondu singarm pannikondu
Senthoorap pottum vaithu sElaadum karaiyil nindren
Paraatta vaa... neeraatta vaa...
Nee neendhava ennodu
Moham theerum...
mmmhhhmmm...Oho...

Thazhuvaadha dhegam ondru
Thaniyaadha moham kondu
Thaalaatta thendral undu
Thaalaadha aasai undu
Poo manjamum.., thenkinnamum...
Nee thedivaa... ore raagam
Paadi aaduvom vaa...
mmmhhhmmm... Oho...

(Movie: Ullasa Paravaigal)

Thursday, October 2, 2008

Kadhal Vaanoli...

ஆண்:
சகரிச லிச சகரிச...

எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக
நான்கு கண்கள் சண்டைகள் போட
நாபி கமலத்தில் நண்டுகள் ஊற
பார்வையில் காதல் பூக்கள் பறித்தால் , பறித்தால், பறித்தால்...

பெண்:
காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனதை தொடுமா
தொடுமா, தொடுமா மனதை தொடுமா...
வங்க கடல் போல் நெஞ்சு கடலில்
காதல் புயல்தான் மையல் இடுமா
இடுமா, இடுமா மையல் இடுமா...

இருபது நொடிகளில் இருதய அறைகளில்
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ
இவன் இரு கைகளில் இருபது விரல்களும்
இவளது விரல்களில் சேர்ந்தனவோ
யாரும் நடக்காத சாலையிலே
காதலின் தடங்கல் தெரிந்தனவோ
தண்டவாளத்தின் ஓரத்திலே
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ
வண்ணத்துபூச்சிகள் பறந்தாலென்ன
விதையோடு வண்ணங்கள் சேர்த்திடுவோம்
தொடவா, தொடவா மனதை தொடவா...
இடவா, இடவா மையல் இடவா...

தட தட மரங்கொத்தி பறவையும்
மரங்கொத்தி போகுதே
மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே
மழை நின்று போனாலும்
மரக்கிளை கூறுதே
மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே
இன்று நீர் விட்டு இன்றேதான்
மலரும் தாவரமும் உள்ளதுவோ
இதய கிளையோடு பூப்பூக்கும்
காதல் தாவரம் நானதுவோ
கோட்டையில் காவலன் இருந்தாலென்ன
தூக்கத்துள் காதல் உள் வருமே
தொடவா, தொடவா மனதை தொடவா...
இடவா, இடவா மையல் இடவா...

(திரைப்படம்: ஆல்பம்)

Monday, September 15, 2008

Evano Oruvan...


Evano oruvan vaasikkiraan...iruttilirundhu naan yaasikkiraen

Someone is playing (the flute), in the dark I am loving

Thavam poal irundhu yoasikkiraen adhaith thavanai muraiyil naesikkiraen

Like a meditation I am thinking, and I am loving those thoughts in the sequence

Kaettu kaettu naan kirangugiraen kaetpadhai avanoa ariyavillai

I am continuously listening and falling for thee and he does not know I am listening

Kaattu moongilin kaadhukkullae avan oodhum ragasiyam puriyavillai

Not understanding the secrets which he blew into the ear of the bamboo from the woods


Pullaanguzhalae poonguzhalae neeyum naanum oru jaadhi 

My bamboo flute, my flowery flute you and I are the same race

Ullae urangum aekkaththilae unakkum enakkum sari paadhi

The eagerness that sleeps inside is equally divided for you and me

Kangalai varudum thaenisaiyil en kaalam kavalai marandhiruppaen

In the soft music that touches my eyes I forget my lifetime of pain

Innisai mattum illaiyendraal naan endroa endroa irandhiruppaen

If there wasn't soft music I would have died long ago


Urakkam illaa munniravil en ul manadhil oru maarudhalaa

In these sleepless nights is there a change in my mind?

Irakkam illaa iravugalil idhu evanoa anuppum maarudhalaa

In these loveless nights is this a change sent by him?

Endhan sogam theervadharku idhu poal marundhu piridhillaiyae

To cure my sadness there isn't a medicine like that

Andhak kuzhalaippol azhuvadharku aththanai kangal enakkillaiyae

To cry like the flute I don't have that many eyes! ( the holes in the flute)

(Movie:  Alaipayuthey)

Friday, August 22, 2008

காதல் வைத்து...


காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்.
காற்றில் உந்தன்
குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்...
காதலெனும் கடலுக்குள்
நான் விழுந்தேன்;
கரையினில் வந்தப்பின்னும்
நான் மிதந்தேன்;
அசைந்தாய் அன்பே அசைந்தேன்...
அழகாய் ஐயோ தொலைந்தேன்...

தேவதை கதை கேட்டப்போதேல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை.
நேரில் உன்னையே பார்த்த பின்புநான்
நம்பிவிட்டேன் மறுக்கவில்லை.
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்.
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்...

உன்னை கண்ட நாள் ஒளி வட்டம்போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி.
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி.
கடலோடு பேசவைத்தாய்;
கடிகாரம் வீசவைத்தாய்;
மழையோடு குளிக்கவைத்தாய்;
வெயில்கூட ரசிக்கவைத்தாய்...


(திரைப்படம்: தீபாவளி)

உயிரே உயிரே...


உயிரே
உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே
கனவே கனவே கலையாதே
கண்ணீர் துளியில் கரையாதே
நீயில்லாமல் இரவே விடியாதே

பெண்ணே நீவரும் முன்னே
ஒரு பொம்மை போலே இருந்தேன்
உன் புன்னகையாலே முகவரி தந்தாயே...
ஆயுள் முழுதும் அன்பே
உன் அருகினில் வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல் போலே சென்றாயே...

புள் மேல் வாழும்,
பனிதான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம்
ஆனால் பொற்காலம்.
உன் அருகாமை,
அதை நான் இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த
ஒவ்வொரு நொடியின்
நினைவே சந்தோஷம்.
கடல் மூழ்கிய தீவுகளை
கண் பார்வைகள் அறிவதில்லை
அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்...

உன் கைக்கோர்த்து அடி
நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்
என்றே கேட்கிறதே.
உன் தோள் சாய்ந்து
நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டிக்கொண்டு
நெருப்பாய் எரிக்கிறதே.
நிழல் நம்பிடும்
என் தனிமை;
உடல் நம்பிடும்
உன் பிரிவை;
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே...

(திரைப்படம்: சந்தோஷ் சுப்ரமணியம்)

Monday, July 14, 2008

காற்றின் மொழி...


காற்றின் மொழி...
ஒலியா, இசையா..?
பூவின் மொழி...
நிறமா, மணமா..?
கடலின் மொழி...
அலையா, நுரையா..?
காதல் மொழி...
விழியா, இதழா..?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை...

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவி திரியும் காற்று உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை...

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவுக்கூட மொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை...


(திரைப்படம்: மொழி)