உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே
கனவே கனவே கலையாதே
கண்ணீர் துளியில் கரையாதே
நீயில்லாமல் இரவே விடியாதே
பெண்ணே நீவரும் முன்னே
ஒரு பொம்மை போலே இருந்தேன்
உன் புன்னகையாலே முகவரி தந்தாயே...
ஆயுள் முழுதும் அன்பே
உன் அருகினில் வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல் போலே சென்றாயே...
புள் மேல் வாழும்,
பனிதான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம்
ஆனால் பொற்காலம்.
உன் அருகாமை,
அதை நான் இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த
ஒவ்வொரு நொடியின்
நினைவே சந்தோஷம்.
கடல் மூழ்கிய தீவுகளை
கண் பார்வைகள் அறிவதில்லை
அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்...
உன் கைக்கோர்த்து அடி
நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்
என்றே கேட்கிறதே.
உன் தோள் சாய்ந்து
நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டிக்கொண்டு
நெருப்பாய் எரிக்கிறதே.
நிழல் நம்பிடும்
என் தனிமை;
உடல் நம்பிடும்
உன் பிரிவை;
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே...
(திரைப்படம்: சந்தோஷ் சுப்ரமணியம்)
No comments:
Post a Comment