Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Monday, July 14, 2008

காற்றின் மொழி...


காற்றின் மொழி...
ஒலியா, இசையா..?
பூவின் மொழி...
நிறமா, மணமா..?
கடலின் மொழி...
அலையா, நுரையா..?
காதல் மொழி...
விழியா, இதழா..?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை...

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவி திரியும் காற்று உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை...

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவுக்கூட மொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை...


(திரைப்படம்: மொழி)

யாரோ யாருக்குள் இங்கு யாரோ...


யாரோ
யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடையில்லா ஒரு கேள்வி.
உயிர் காதல் ஒரு வேள்வி.
காதல் வாரம் இங்கு நான் வாங்க
கடைக்கண்கள் நீ வீச
கொக்கைப்போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி.


ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே, செய்தாய் நித்தமே
ஓஹோ, நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
உன்னை சூழ்கிறேன், நான் உன்னை சூழ்கிறேன்.
காற்றில் வைத்த சூடம் போல
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஸ்ணம் வாங்கி
என்னால் வாழலாகாது
அன்பே வா, ஹே...

உந்தன் ஆடை காயப்போடும்
உங்கள் வீட்டு கம்பிக்கொடியாய்
என்னை எண்ணினேன்; நான் தவம் பண்ணினேன்
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய்விடு; இல்லை ஏதோ ஆய்விடும்.
காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேன் தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா, ஹா...


(திரைப்படம்: சென்னை 600 028)

Saturday, July 5, 2008

எந்தன் வானமும் நீதான்...


எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே...
எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உந்தன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே...
உன் பேச்சில்லே என் முகவரி ;
உன் மூச்சில்லே என் வாழ்வடி;
எந்தன் வாழ்வடி...

நீ நடக்கும்போது உன் நிழலும்
மண்ணில் விழும் முன்னே ஏந்திக்கொள்வேன்.
உன் காதலின் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே...
உன்னுடைய கால் தடத்தை மழையடித்தால்
குடையொன்றை பிடித்து காவல் செய்வேன்.
உன்னாலின்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே.
உன் பேச்சில்லே என் முகவரி ;
உன் மூச்சில்லே என் வாழ்வடி;
எந்தன் வாழ்வடி...

ஒரேயொரு வார்த்தையில் கவிதையென்றால்
உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும்.
என் பேரைத்தான் யாரும் கேட்டால்
உன் பெயர் சொல்கிறேன் .
ஒரேயொரு உடலில் இரு இதயம்
காதலெனும் உலகத்தில்தான் இருக்கும்
நீ இல்லையேல், நான் இல்லையே
நெஞ்சம் சொல்லுதே...
உன் பேச்சில்லே என் முகவரி;
உன் மூச்சில்லே என் வாழ்வடி;
எந்தன் வாழ்வடி...


(திரைப்படம்: வாழ்த்துக்கள்)