Showing posts with label கவிஞர். Show all posts
Showing posts with label கவிஞர். Show all posts

Thursday, October 2, 2008

Kadhal Vaanoli...

ஆண்:
சகரிச லிச சகரிச...

எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக
நான்கு கண்கள் சண்டைகள் போட
நாபி கமலத்தில் நண்டுகள் ஊற
பார்வையில் காதல் பூக்கள் பறித்தால் , பறித்தால், பறித்தால்...

பெண்:
காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனதை தொடுமா
தொடுமா, தொடுமா மனதை தொடுமா...
வங்க கடல் போல் நெஞ்சு கடலில்
காதல் புயல்தான் மையல் இடுமா
இடுமா, இடுமா மையல் இடுமா...

இருபது நொடிகளில் இருதய அறைகளில்
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ
இவன் இரு கைகளில் இருபது விரல்களும்
இவளது விரல்களில் சேர்ந்தனவோ
யாரும் நடக்காத சாலையிலே
காதலின் தடங்கல் தெரிந்தனவோ
தண்டவாளத்தின் ஓரத்திலே
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ
வண்ணத்துபூச்சிகள் பறந்தாலென்ன
விதையோடு வண்ணங்கள் சேர்த்திடுவோம்
தொடவா, தொடவா மனதை தொடவா...
இடவா, இடவா மையல் இடவா...

தட தட மரங்கொத்தி பறவையும்
மரங்கொத்தி போகுதே
மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே
மழை நின்று போனாலும்
மரக்கிளை கூறுதே
மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே
இன்று நீர் விட்டு இன்றேதான்
மலரும் தாவரமும் உள்ளதுவோ
இதய கிளையோடு பூப்பூக்கும்
காதல் தாவரம் நானதுவோ
கோட்டையில் காவலன் இருந்தாலென்ன
தூக்கத்துள் காதல் உள் வருமே
தொடவா, தொடவா மனதை தொடவா...
இடவா, இடவா மையல் இடவா...

(திரைப்படம்: ஆல்பம்)

Sunday, July 6, 2008

இந்த நிமிடம்...


இந்த
நிமிடம், இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?
இந்த நெருக்கம், இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?
இந்த மௌனம், இந்த மௌனம்
இப்படியே உடையாதா?
இந்த மயக்கம், இந்த மயக்கம்
இப்படியே நீளாதா?

ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய் திரிந்த
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னை துரத்தியதே
உன்னை காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய் கிடக்கிறதே
இதயம் நொறுங்குகிறேன், இதையே விரும்புகிறேன்
இது போடும் பெண்ணே, இறப்பேனே கண்ணே
ஆயிரம் காலம் வாழ்கிற வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ...

கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும்
மனிதன் வகுத்த திசையாகும்.
உன் முகம் இருக்கும் திசையே எந்தன்
கண்கள் பார்க்கும் திசையாகும்.
கோடையும் வாடையும் இலையுதிர் காலமும்
இயற்கை வகுத்த நெறியாகும்.
உன்னுடன் இருக்கும் காலத்தில் தானே
எந்தன் நாட்கள் உருவாகும்.
உந்தன் நிழலருகே ஓய்வுகள் எடுத்திடுவேன்.
இது காதல் இல்லை; இது காமம் இல்லை
வேகத்தை தாண்டிய மோகத்தை தாண்டிய
உறவும் இதுதானோ...


(திரைப்படம்: பள்ளிக்கூடம்)

Saturday, July 5, 2008

எந்தன் வானமும் நீதான்...


எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே...
எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உந்தன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே...
உன் பேச்சில்லே என் முகவரி ;
உன் மூச்சில்லே என் வாழ்வடி;
எந்தன் வாழ்வடி...

நீ நடக்கும்போது உன் நிழலும்
மண்ணில் விழும் முன்னே ஏந்திக்கொள்வேன்.
உன் காதலின் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே...
உன்னுடைய கால் தடத்தை மழையடித்தால்
குடையொன்றை பிடித்து காவல் செய்வேன்.
உன்னாலின்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே.
உன் பேச்சில்லே என் முகவரி ;
உன் மூச்சில்லே என் வாழ்வடி;
எந்தன் வாழ்வடி...

ஒரேயொரு வார்த்தையில் கவிதையென்றால்
உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும்.
என் பேரைத்தான் யாரும் கேட்டால்
உன் பெயர் சொல்கிறேன் .
ஒரேயொரு உடலில் இரு இதயம்
காதலெனும் உலகத்தில்தான் இருக்கும்
நீ இல்லையேல், நான் இல்லையே
நெஞ்சம் சொல்லுதே...
உன் பேச்சில்லே என் முகவரி;
உன் மூச்சில்லே என் வாழ்வடி;
எந்தன் வாழ்வடி...


(திரைப்படம்: வாழ்த்துக்கள்)