Monday, October 20, 2008

Enakku Piditha Paadal...

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயை கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா..

பித்து பிடித்ததை போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதை போல
விழி மனசை குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்...

வெள்ளி கம்பிகளை போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர் துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்...

(திரைப்படம்: ஜுலி கணபதி)
(பாடகர்: திரு. K.J. ஜேசுதாஸ்)


No comments: