சகரிச லிச சகரிச...
எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக
நான்கு கண்கள் சண்டைகள் போட
நாபி கமலத்தில் நண்டுகள் ஊற
பார்வையில் காதல் பூக்கள் பறித்தால் , பறித்தால், பறித்தால்...
பெண்:
காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனதை தொடுமா
தொடுமா, தொடுமா மனதை தொடுமா...
வங்க கடல் போல் நெஞ்சு கடலில்
காதல் புயல்தான் மையல் இடுமா
இடுமா, இடுமா மையல் இடுமா...
இருபது நொடிகளில் இருதய அறைகளில்
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ
இவன் இரு கைகளில் இருபது விரல்களும்
இவளது விரல்களில் சேர்ந்தனவோ
யாரும் நடக்காத சாலையிலே
காதலின் தடங்கல் தெரிந்தனவோ
தண்டவாளத்தின் ஓரத்திலே
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ
வண்ணத்துபூச்சிகள் பறந்தாலென்ன
விதையோடு வண்ணங்கள் சேர்த்திடுவோம்
தொடவா, தொடவா மனதை தொடவா...
இடவா, இடவா மையல் இடவா...
தட தட மரங்கொத்தி பறவையும்
மரங்கொத்தி போகுதே
மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே
மழை நின்று போனாலும்
மரக்கிளை கூறுதே
மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே
இன்று நீர் விட்டு இன்றேதான்
மலரும் தாவரமும் உள்ளதுவோ
இதய கிளையோடு பூப்பூக்கும்
காதல் தாவரம் நானதுவோ
கோட்டையில் காவலன் இருந்தாலென்ன
தூக்கத்துள் காதல் உள் வருமே
தொடவா, தொடவா மனதை தொடவா...
இடவா, இடவா மையல் இடவா...
(திரைப்படம்: ஆல்பம்)
No comments:
Post a Comment