என் அம்முக்குட்டி; என் பொம்முக்குட்டி
என் புஜ்ஜுக்குட்டி; என் பூனைக்குட்டி
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக்கொள்வோம்
டெல் மீ நவ், டெல் மீ நவ்
டெல் மீ டெல் மீ டெல் மீ நவ்
சந்திரத்தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னை தூங்கவைப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்
நட்சத்திரங்கள் எல்லாமே அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
நீ என்பதும் அடி நான் என்பதும்
இன்று நாம் ஆகி போகின்ற நேரம்...
காலை சூரியன் குடைப்பிடிக்க
கோலங்கள் எல்லாம் வடம் பிடிக்க
கிளியே உன்னை கைப்பிடிப்பேன்
நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அனைத்திடுவேன்
வானாகினாய் காற்றின் வெளியாகினாய்
எந்தன் ஊணாகி உயிரானாய் பெண்ணே...
(திரைப்படம்: ஆல்பம்)
No comments:
Post a Comment